மாற்று ப‌ய‌ன்க‌ளை சொல்லும் இணைய‌த‌ளம்

மோர்யூசஸ் இணையதள‌த்தை பயனுள்ள தளம் என்று த‌யங்காமல் சொல்லிவிடலாம். காரணம், இந்த தளத்தின் நோக்கமே ஒவ்வொரு பொருட்களின் பலவிதமான பயன்களை பட்டியலிடுவது தான்.
ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட பயன் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் பல பொருட்களுக்கு அவற்றுக்கான பிரத்யேக பயன்பாட்டைவிட கூடுதல் பயன்பாடுகளும் உண்டு. இவற்றை எல்லாம் பட்டியலிடுவதற்காக தான் மோர்யூசஸ் தள‌ம் அமைக்கப்ப‌ட்டுள்ளது.
அதாவது பொருட்களுக்கான மேலும் பயன்கள்.அது தான் தளத்தின் பெயரும் பொருளும்.
இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளலாம்.இப்போதைக்கு பட்டியல் அத்தனை விரிவாக இல்லை.ஆனால் நீங்களே கூட உங்களூக்கு தெரிந்த பொருட்களுக்கான மாற்று பயன்களை சமர்பிக்கலாம்.
எளிமையான‌ வ‌டிவமைப்பு கொண்ட‌ இந்த‌ தள‌ம் ப‌ய்னப‌டுத்த‌வும் எளிதாக‌வே இருக்கிற‌து.
—–
\link;
http://moreuses.com/

Comments

Popular posts from this blog