கார்ட்டூன் படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்.

கார்ட்டூன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும்
தான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் தாங்கள்
கையால் வரைந்த மற்றும் கணினி துணையுடன் வரைந்த பல
கார்ட்டூன்-களை எளிதாக ஆன்லைன் மூலம் தரவிரக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

எப்போதும் உங்கள் குழந்தை கையில் பேப்பர் வைத்து ஏதாவது
கிறுக்கி கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்கு இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.எப்படி எல்லாம் குழந்தைகள் கார்ட்டூன்
சித்திரம் வரைந்து ஆன்லைன் மூலம் அதை அனைத்து மக்களிடமும்
எளிதாக கொண்டு சேர்க்கவும் அதை யார் வேண்டுமானாலும்
தரவிரக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.scribbls.com
எந்தத் துறையில் கார்ட்டூன் சித்திரம் வேண்டுமோ அந்தத்துறையை
தேர்ந்தெடுத்து பலவிதமாக வரையப்பட்ட எண்ணற்ற கார்ட்டூன்
படங்களை எளிதாக தரவிரக்கலாம். சில நேரங்களில் கவிதை
எழுதுபவர்கள் இதே போல் கார்ர்டூன் சித்திரங்களை தங்களின்
கவிதை படைப்புகளில் கூட இடம் பெறச்செய்வதும் உண்டு.
பொழுதுபோக்காக கார்ட்டூன் வரைபவர்களுக்கு மேலும்
பலவிதமான ஐடியாக்கள் இந்ததளம் மூலம் கிடைப்பதுண்டு.
உங்கள் செல்ல குட்டீஸ் வரைந்த கார்டூன் படங்களை
இத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றலாம்.
                                              நன்றி:winmani.wordpress.com

Comments

Popular posts from this blog