Posts

Showing posts from September, 2011

பழமையான தமிழ் இலக்கிய நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

Image
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி.உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ்மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.  நம் தாய்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகபழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு  மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய்மொழியில் எவ்வளோவோ இலக்கிய  நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது.  கீழே நமது தமிழின் மிகச்சிறந்த இலக்கிய நூல்களை தங்களுக்கு கொடுத்துள்ளேன் அந்தந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான நூல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். Tamil classic Literature No. Book Title Author Download PDF Tamil book ...

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்

Image
கணிதம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் நமக்குத் தான் இந்த பதிவு. பள்ளியில் இருந்து கல்லூரி வரை கணக்கு என்றாலே ஒரு வித பயம் தான் ஆசிரியர்கள் கூட சில நேரங்களில் தடுமாறுவது உண்டு இனி அந்த பிரச்சினை இல்லை. உங்கள் கணித கேள்விகளை இந்த இணையதளத்தில் கொடுத்தால் உடனடியாக பதில் வரும் அதுவும் சாதாரணமாக இல்லை. “ Step by Step ” என்று சொல்லக்கூடிய வழிமுறையுடன் அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை அனைத்துக்கும் பதில் அளிக்கிறது. எந்த கணக்கு போட்டாலும் விடையை சரியாக அளிக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இதில் சேரலாம். இலவசமாக இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி உங்கள் கேள்விகளை கேட்கலாம். கிராப் மட்டும் தான் எனக்கு வராது என்கிறீர்களா அதற்கும் இவர்களிடம் பதில் உண்டு. ஒவ்வொரு வகையிலும் இலட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரி கணக்கும் உள்ளது. வீட்டுப்பாடம் என்று தனக்கு தெரியாத கணக்கை கொடுக்கும் ஆசிரியர்களிடம் இருந்து கண்டிப்பாக அப்பாவி மாணவர்களை இது காப்பாற்றும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இந்த இணையதளம் மிக உதவியாக இருக்கும். இணையதள முகவரி ...

கார்ட்டூன் வரைவது எப்படி எளிதாக சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்

Image
கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள் தெரிந்து வைத்திருப்பதில் முக்கியமான ஒன்று கார்ட்டூன் எனப்படும் அனிமேசன் வடிவங்களை எப்படி உருவாக்குவது என்றும் அதை மேலும் அழகு படுத்துவது எப்படி என்றும் இவர்களுக்கு மட்டுமல்ல கார்ட்டூன் வரைய ஆசைப்படும் அனைவருக்கும் எளிய முறையில் கார்ட்டூன் வரைய சொல்லிக் கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. கணினியில் அனிமேசன் துறையில் தனித்தன்மை பெற்று விளங்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள், பெரும் பணம் செலவு செய்துm அனிமேசன் Character உருவாக்குவதில் இன்னும் சரியாக வரவில்லையா, எப்படி எளிதாக ஆன்லைன் மூலம் அனிமேசன் வடிவங்களை உருவாக்கலாம் என்று சொல்லிக்கொடுக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது. இணையதள முகவரி : http://www.how-to-draw-cartoons-online.com இந்ததளத்திற்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கார்ட்டூன் வடிவங்கள் உருவாக்குவது எப்படி என்று ஒவ்வொரு படியாக படிக்கலாம். கார்ட்டூனின் எந்த வடிவம் வரைய வேண்டுமோ அந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து நாம் கார்ட்டூன் வரைய கற்றுக்கொள்ளலாம். மற்றத் தளங்களை விட இந்தத்தளத்தில் முப்பரிமான 3D அனிம...

கூகுள் கணினி பற்றிய அடிப்படையை நம் பெற்றோருக்கு சொல்லிக்கொடுக்கிறது

Image
கணினி பற்றிய அடிப்படை தகவல்கள் தெரியாமல் இருக்கும் நம் பெற்றோருக்கு  கணினிப் பற்றிய தகவல்களை வீடியோவுடன் புரிய வைக்க கூகுள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு புதுமைகள் செய்வதில் தங்களுக்குள்ளே போட்டி போட்டு கொள்ளும் கூகுள் நிறுவனத்தில் இருந்து பெற்றொருக்கு கணினி பற்றிய அடிப்படை பாடத்தை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கூகுளின் இருந்து வெளிவந்த தளம் என்ற வார்த்தையை கேட்டதுமே கண்ணை மூடிக்கொண்டு பல பேர் இதில் சேர்ந்துள்ளனர். இணையதள முகவரி : http://www.teachparentstech.org பெற்றொருக்கு கணினி பற்றி சொல்லிக்கொடுக்க கூட நேரம் இல்லையே என்று சொல்லும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும். பெற்றொருக்கு இருக்கும் அடிப்படை கேள்விகளில் இருந்து copy & paste , adjust the time on your clock , change your desktop background , change your wallpaper (PC) , make text bigger (or smaller) , take a screenshot, change your screensaver (Mac) , change your screensaver (PC)  இணையதளம், மீடியா வரை அனைத்து தகவல்களையும் வீடியோவுடன் சொல்லி எளி...

கார்ட்டூன் படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்.

Image
கார்ட்டூன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும் தான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் தாங்கள் கையால் வரைந்த மற்றும் கணினி துணையுடன் வரைந்த பல கார்ட்டூன்-களை எளிதாக ஆன்லைன் மூலம் தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எப்போதும் உங்கள் குழந்தை கையில் பேப்பர் வைத்து ஏதாவது கிறுக்கி கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்கு இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.எப்படி எல்லாம் குழந்தைகள் கார்ட்டூன் சித்திரம் வரைந்து ஆன்லைன் மூலம் அதை அனைத்து மக்களிடமும் எளிதாக கொண்டு சேர்க்கவும் அதை யார் வேண்டுமானாலும் தரவிரக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.scribbls.com எந்தத் துறையில் கார்ட்டூன் சித்திரம் வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து பலவிதமாக வரையப்பட்ட எண்ணற்ற கார்ட்டூன் படங்களை எளிதாக தரவிரக்கலாம். சில நேரங்களில் கவிதை எழுதுபவர்கள் இதே போல் கார்ர்டூன் சித்திரங்களை தங்களின் கவிதை படைப்புகளில் கூட இடம் பெறச்செய்வதும் உண்டு. பொழுதுபோக்காக கார்ட்டூன் வரைபவர்களுக்கு மேலும் பலவிதமான ஐடியாக்கள் இந்ததளம் மூலம் கிடைப்பதுண்டு. உங்கள் செல்ல கு...

ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.

Image
கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும், நாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா ? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது, ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 கணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு புரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது, சொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு தீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம். இணையதள முகவரி : http://ideone.com இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த மொழியில் புரோகிராம் எழுத வேண்டுமோ அந்த மொழியை வலதுபக்கம் இருக்கும் Choose Language என்பதில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் புரோகிராமை எழுதிவிட்டு Run code என்ற ஆப்சனையும் தேர்ந்தெடுத்துவிட்டு Submit என்ற பொத்தானை அழுத்தினால...

உங்கள் ‘பிசி’யை நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

க‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்லை.அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ரே போதும் என‌ ப‌ல‌ரும் திருப்திப‌ட்டுக்கொள்கின்ற‌ன‌ர். அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் விலை குறைவாக‌ இருக்கும் என்ப‌தோடு ந‌ம்ப‌க‌மான‌தாக‌வும் இருக்கிற‌து.தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ள் மூலமே வாங்க‌ப்ப‌டுவ‌தால் க‌ம்ப்யூட்ட‌ரில் பிர‌ச்ச‌னை என்றால் விற்ப‌னை செய்த‌ ந‌ப‌ரே வ‌ந்து ப‌ழுது பார்த்து த‌ரும் வாய்ப்பு அதிக‌ம் உள்ள‌து. பெரிய‌ நிறுவ‌ன‌ த‌யாரிப்பை வாங்கிவிட்டு ச‌ர்வீசுக்கு அலைவதைவிட‌ இது சிற‌ந்த‌து. நிற்க‌ அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட்ர்க‌ளின் அருமையை நீங்க‌ளே ந‌ன்றாக‌ அறிந்திருப்பீர்க‌ள்.இஙே நான் சொல்ல‌ வ‌ருவ‌து, நீங்க‌ள் நினைத்தால் உங்க‌ளுக்கான‌ க‌ம்ப்யூட்ட‌ரை நீங்க‌ளே உருவாக்கி கொள்ள‌லாம் என்ப‌து தான். அதாவ‌து நீங்க‌ளே அசெம்பிள் செய்து கொள்ள‌லாம். அதெப்ப‌டி சாத்திய‌ம் என‌க்கு க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ற்றி எதுவுமே தெரியாதே என‌ நினைத்தாலும் ச‌ரி, அப்ப‌டியா இது எப்ப்டி சாத்திய‌ம் என‌ ஆர்வ‌முட‌ன் கேட்டாலு...

கம்யூட்டர் வரலாறு;வித்தியாச‌மான‌ க‌ட்டுரை

கம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதள‌ங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் கம்ப்யூட்டர் வரலாறு தொடர்பான உண்மையான வேட்கை இல்லை எனறால் பலவற்றை படிப்பது கடினம். ஆனால் யார் வேண்டுமானாலும் படித்து பார்க்ககூடிய வகையில் மிகவும் வித்தியாசமான கம்ப்யூட்டர் கட்டுரை நெட்டோரொமா எனும் இணைய இதழில் வெளியாகி உள்ளது. அகர வரிசையில் கம்ப்யூட்டர் வரலாற்றை விவரித்திருப்பது தான் இந்த கட்டுரையின் சிறப்பு.ஆப்பிளில் துவங்கி பிளாக்பெரி, சிஸ்கோ என தொடங்கி டெல்,ஃபோர்டான்.ஜிமெயில் ,டிவிட்டர் என முன்னேறும் இந்த கட்டுரை உண்மையிலேயே படிக்க சுவையாக உள்ளது. அப்ப‌டியே ப‌ர‌வை பார்வை போல‌ க‌ம்ப்யூட்ட‌ர் வ‌ர‌லாற்றை திரும்பி பார்க்க‌வும் முடிகிற‌து. —– link; http://www.neatorama.com/2009/10/30/alphabet-of-computing/    

மாற்று ப‌ய‌ன்க‌ளை சொல்லும் இணைய‌த‌ளம்

மோர்யூசஸ் இணையதள‌த்தை பயனுள்ள தளம் என்று த‌யங்காமல் சொல்லிவிடலாம். காரணம், இந்த தளத்தின் நோக்கமே ஒவ்வொரு பொருட்களின் பலவிதமான பயன்களை பட்டியலிடுவது தான். ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட பயன் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் பல பொருட்களுக்கு அவற்றுக்கான பிரத்யேக பயன்பாட்டைவிட கூடுதல் பயன்பாடுகளும் உண்டு. இவற்றை எல்லாம் பட்டியலிடுவதற்காக தான் மோர்யூசஸ் தள‌ம் அமைக்கப்ப‌ட்டுள்ளது. அதாவது பொருட்களுக்கான மேலும் பயன்கள்.அது தான் தளத்தின் பெயரும் பொருளும். இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளலாம்.இப்போதைக்கு பட்டியல் அத்தனை விரிவாக இல்லை.ஆனால் நீங்களே கூட உங்களூக்கு தெரிந்த பொருட்களுக்கான மாற்று பயன்களை சமர்பிக்கலாம். எளிமையான‌ வ‌டிவமைப்பு கொண்ட‌ இந்த‌ தள‌ம் ப‌ய்னப‌டுத்த‌வும் எளிதாக‌வே இருக்கிற‌து. —– \link; http://moreuses.com/

உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய

Image
நமக்கே தெரியாமல் நாம் பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். நாம் நன்றாக ஒவியம் வரையலாம் , பாட்டு பாடலாம்,இசைவாத்தியங்கள் வாசிக்கலாம். உடற்பயிற்ச்சி செய்து நம் உடலால் கார் போன்றவற்றை இழுக்கலாம், புரோகிராம் எழுதுவதில் கெட்டிக்காரராக இருக்கலாம் , ஞாபகசக்தியில் சிறந்து விளங்குபவராக இருக்கலாம், தியானம் செய்வதில் சிறந்தவராகவும் இருக்கலாம், புதுசு புதுசாய் எதாவது கண்டுபிடிப்பவராகவும் இருக்கலாம்,நாம் செய்யும் இதெல்லாம் கின்னஸ் ரெக்காடில் வருமா என்ற சந்தேகம் வேண்டாம். நீங்கள் எந்த துறையை சேந்தவர்களாக இருந்தாலும் அந்த துறையின் சாதனையும் சாதனையாளர்களையும் பார்க்கலாம். கலைஞர் தொலைக்காட்சியில் வரும் “ தில் தில் மனதில் “ என்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதெல்லாம் இதில் பாதிக்கு மேற்பட்டோர் கின்னஸ் ரெக்காடில் இருக்க வேண்டியவர்கள் என்றே தோன்றுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த கின்னஸ் ரெக்காடில் நம் சாதனையை பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். www.guinnessworldrecords.com இந்த இணையதளத்திற்கு சென்று ” SET  RECORD ” என்ற மெனுவை அழுத்தி வரும் பக்கத...

அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தங்களை இலவசமாக தரவிரக்கலாம்.

Image
இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும் கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள் இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை , கணிதம் முதல்  கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://sciencebooksonline.info படம் 1 இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி வலது பக்கத்தின் மேல் இருக்கும்  எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது.தேவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள...